பியூமி ஹன்சமாலி உட்பட 15 குழுவினரை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு பஸ்ஸில் அழைத்துக்கொண்டு செல்லும் போது பியூமி பஸ்ஸில் இருந்து கொழும்பு மாவட்டத்தின் உயர்ந்த அதிகாரமுள்ள அமைச்சர்களில் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து எம்மை அழைத்துச் செல்லாமல் திருப்ப அனுப்பச் சொல்லுமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து பியூமி ஹன்சமலியின் தொலைபேசி மூலம், பஸ்ஸில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக திரும்பி வருமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், பொலிஸ் அதிகாரி அந்த கோரிக்கையை மறுத்து, நாட்டின் மிக உயர்ந்த இடத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டதால் இந்த உத்தரவை மாற்ற முடியாது என்று கூறினார்.
இதன்படி, இந்த குழு தற்போது தொடர்புடைய தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.