மத குருமார்களுக்கு 5௦௦௦ உதவித்தொகை | பாபு சர்மா குருக்கள் வேண்டுகோள்

பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைவாக பயணத்தடை காரணமாக வருமானம் இழந்த இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத குருமாரின் வருமானத்தில் தங்கி வாழ்கின்ற குடும்பங்களுக்கு ரூபா 5௦௦௦ உதவித்தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதாரம், நுண்நிதிய, சுயதொழில் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கிராம அலுவலர்களிடமிருந்து இந்துக் குருமார்கள் தங்களது இந்துக்குருமார் அடையாள அட்டையை அல்லது ஆலய அறங்காவலரிடம் குருமார் என உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தைக் காண்பித்து 5௦௦௦ ரூபா உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே வருமானம் இழந்த இந்துக் குருமார்கள் உரிய கிராம உத்தியோகத்தரை தொடர்புகொண்டு உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமரின் இந்துமத அலுவல்களுக்கான இணைப்புச்செயலார் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!