அகவம் மக்கள் இயக்கம் | கொழும்பில் இன்று உதயமாகியது

கல்வி மேம்பாட்டின் குரலாக கொழும்பில் இன்று உதயமாகியது அகவம் மக்கள் இயக்கம். கலைஞர், ஊடாகவியலாளர் என பல்துறைசார் திறமைகளைக் கொண்ட ராதாமேத்தாவின் மற்றறொரு நிறுவகத் தலைமைத்துவத் தில் இந்த அமைப்பு தோற்றம் பெறுகின்றது.

இதன் செயலாளராக பிரபல கவிதாயினியும் கலைவித்தகியுமான சுபாஷினி பிரணவனும் பொருளாராக ஊடகவியலாளர் ஜே.எம்.ரிஸ்வானும் உப தலைவர்களாக ஊடகவியலாளர்களான எஸ்.நிஷாந்தன், ஜே.சுபானி, உபசெயலாளராக ஊடகவியலாளர் கவிதாபாரதி, உபபொருளாளராக ஊடகவியலாளர் ஆர்.தேன்மொழி, தேசிய அமைப்பாளாராக ஜே.எம்.சாமிலும் செயற் படவுள்ளனர்.


வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஊக்குவிப்பு அளிப்பது, கலை,இலக்கியத்துறைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் கலைகளில் பயிற்சிகளை அளிப்பது, கலாசார – பண்பாட்டு விழுமியங்களைப் பேணும் வகையிலான முயற்சிகளில் இளையவர்களை ஈடுபடச்செய்வதற்கான பயிற்சிகளை வழங்குவது,சமூகநல பணிகளில் விழிப்புணர்வுப் பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வது,இன,மத. ஐக்கிய சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான நல்லிணக்கச் செயற் பாடுகளை முன்னெடுப்பது, இடர்நிலைமைகள் ஏற்படும்போது உதவிப்பணிக ளை மேற்கொள்வது – இதற்கான பயிற்சிகளை வழங்குவது,சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொள்வது, இயற்கை மாசடைதல் மற்றும் அதனைப் பேணுதல் தொடர்பான விழிப் புணர்வுத் திட்டங்களை வழிநடத்துவது, மாற்றுத் திறனாளிகளின் தேவைகளுக்கான உதவித் திட்டங்களை ஏற்பாடு செய்வது,இளையவர்களின் திறமைகளின் மேம்பாட் டுக்கான வழிவகைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்புகளை வழங்குவது என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது.


கொரேனா பீதிகளுக்கு மத்தியில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட நிலையில் அதனோடு வாழப்பழகிக்கொண்டு தமது கல்விசார் முயற்சிகளைத் தொடரவேண்டும் என்ற நோக்கில் சமகாலத்தில் இதனை சமூக வலைதளங்களில் ஊடான செயற் பாடாக முன்னேடுக்கத் திட்டமிட்டு இந்த அமைப்பு உதயமாகியுள்ளது.

கொரோன ஓயும்வரை இதன் பணிகள் வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் பின்னர் அரங்க செயற்பாடுகளான நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பினில் இணைந்து செயற்பட விரும்பும் ஆர்வலர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு மேற்படி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்புகளுக்கு Agvampeoplemovement64@gmail.com என்ற இமெயில் முகவரியுடனும்,0753877163 என்ற தொலைபேசி எண்ணுடனும் இணைந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!