உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.நாமும் வேகமாக ஓடுகிறோம்.
இதில் நமக்கான நேரத்தையும் , உழைப்பையும் பயன்படுத்தி அவரவர் துறையில் சாதிக்கிறார்கள்.
சிலர் தங்களது ஒரு டாலர் வருமானத்திற்க்காக நமது தொப்புள் கொடி உறவுகளையே காட்டி கொடுப்பது தொடர்கிறது.
சினிமாவிற்கு வர வேண்டும் , சாதிக்க வேண்டும் என்று பல ஆசை கனவுகளுடன் இத்துறைக்கு வருகிறார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நடந்திருக்கலாம்.அது அவரவர் தனிப்பட்ட விடயம் .
ஆனால் ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை சந்திக்கு கொண்டு வந்து அதில் லாபம் தேடும் இணைய நண்பர்களை பார்க்கும் போது அட நாமும் இவர்கள் வாழும் இந்த காலத்தில் தான் இருக்கின்றோமா என்ற கேள்வி எழுகிறது.
எது எப்படியோ தென்னிந்தியாவை போல் ஒரு மிகப்பெரிய சினிமா துறையில் நடக்கும் இதுபோன்ற விடயங்கள் காத்தோடு பறந்து விடுகிறது..
ஒரு சிறு துளி போல் இருக்கும் நமது நாட்டின் சினிமா துறையில் இது போன்ற ஒன்றுக்கும் உதவாத விடயங்களை பெரிதுபடுத்துவது கவலையை தருகிறது – கலையன்பன்