சொல்லிசை பாடகி ரத்யா அற்புதராஜாவின் புதிய பாடல் நேற்றைய தினம் வெளியாகியது.
Lyrics/Rapper : ரத்யா
Music Producer : Akira da Rapwolf
DOP & Edit : தனு ஹரி
Concept & Direction : MC ரா
பாடலில் ரத்யாவால் எழுதப்பட்ட வரிகள் பெரும் அர்த்தங்களை சொல்கிறது.
இது போன்ற பாடல்கள் நிச்சயமாக பேசப்படும்.ரத்யா உள்ளிட்ட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.
தொடர்ந்திடும் பயணத்தில் தொலைந்திடும் தருணத்தில் விடைகளும் தொலைவினில் விடுகதை வழிகளில் மனமது குழப்பத்தில் மயக்கிய நொடிகளில் இதயமும் சலனத்தில் புதிர்களும் புலன்களில் ஏன் ஜீவன்களில் தேடல்களும் அனுதினம் ஏன் விரும்பிடும் வாழ்க்கை இங்கே வலிப்பதும் ஏன் உறவினில் இச்சை கொண்டு அன்பு பிச்சை ஏன்.
இன்பங்களில் முடிவினில் இடர்களும் ஏன் அறிவு தெளிந்து உலகை உணர்ந்து உறவை நாட்ட நினைக்கிறன் தினமும் உலகில் வியக்கும் அளவில் விடயம் நூறு தேடுறன் அழுக்கு மனங்கள் கோடி இங்கே பார்த்து பார்த்து வியக்கிறேன் அடுத்த நொடியில் மரணம் கூட ஆசையாக கேட்க்கிறேன்.
இறைவா நான் இறந்திடும் தருணத்தில் வரம் தா இனி உலகினில் உறவுகள் கிடைத்தால் உயிரினில் உருவத்தில் உண்மை இருந்தால் எந்தன் பிறப்பது தொடர்ந்திட வரம் தா.
உலகினில் நடப்பவை வலிக்குதிங்கே அட உண்மைகளும் ஊமைகளாய் கிடப்பதும் ஏன் தனி மனிதனின் வலிகளும் மதம் தந்த வழிகளும் மோதி கொள்ள வாழ்க்கை இங்கு வெறுப்பது ஏன்.
மனிதனில் பிறிதில்லை மனங்களில் மதமில்லை மனிதனின் பிழையில்லை மனிதமும் விழவில்லை மலையென முளைகையில் மதத்திலும் முடிவில்லை இனமில்லை மதமில்லை ஜாதி இங்கு தேவை இல்லை.
உணர்வின்றி உறவில்லை உலகின்றி அழகில்லை உழைப்பின்றி ஊர் இல்லை உடலின்றி உயிரில்லை உயர்வின்றி வாழ்வில்லை உதடின்றி உண்மை இல்லை உழவின்றி உணவில்லை பணமின்றி உறவில்லையே