பொதுவாகவே வீடியோ பாடல்களுக்கு அதிக வரவேட்பு இருப்பது உண்மை தான்.
மிக அழகான காட்சிகளை பதிவு செய்து ,அதற்கு இசை மற்றும் குரல் கலவை மூலம் அழகுபடுத்துவது சாதாரண விடயமல்ல.
கதிரின் இயக்கத்தில் நேற்று வெளியாகிய கார்குழலி பாடல் பற்றி தான் இன்று பேச்சு .
காட்சிகள் ஒரு கிராமத்து காதலை அழகாக சொல்லி இருக்கிறது.பாடலின் நிறம் மிகவும் நெருக்கமான உறவை காட்டுகிறது.
இடை இடையே பயன்படுத்தியிருக்கும் பொருட்கள் 90 காலப்பகுதிக்கு அழைத்து செல்கிறது.
கார்குழலி பாடலின் சிறப்பு என்ன வென்றால் மதிசுதா கதாநாயகனாக நடிக்க கீர்த்தி குரு கார்குழலியாக நடித்துள்ளார்.
பத்மயன் குரலில் அவரே இசையமைத்த பாடல் தான் கார்குழலி.குவே வரிகளை எழுதியுள்ளார்.
90 களில் நடந்த ஒரு காதல் கதை தான் கரு.அலெக்ஸ் கோபியின் ஒளிப்பதிவில் கதிரின் படத்தொகுப்பில் ஜெயந்தன் விக்கியின் மக்கள் தொடர்பில் தான் வெளிவரப்போகிறாள் கார்குழலி.
குஜின் கெமல் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.