இளங்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கத்தயாராகும் புதிய அலை கலை வட்டம்கலை இலக்கிய துறைகளில் ஆர்வமுள்ள இளங் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க புதிய அலை கலை வட்டம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் முதற் கட்டமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் இளைஞர்கள், யுவதிகளுக்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன.புதிய அலை கலை வட்டத்தின் தற்போதைய நிர்வாகம் அதன் அமைப்பு நடவடிக் கைகளை குழுமங்களாகப் பிரித்து அதனூடாக அந்தந்த துறைசார் ஆர்வலர்களை இணைத்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த வகையில் நடிக-நடிகையர்கள்குழாம்,விவாதிகள்குழாம்,கவிஞர்கள்குழாம்,நடனக் குழாம்,மற்றும் இசைக்கலைஞர்கள் குழாம் என்பவற்றை உருவாக்கியுள்ளது. இத்தகைய குழாம்களில் இணைந்து கொள்வதன்மூலம் இளங்கலைஞர்கள் தமதுதிறமைகளை வெளிக்கொணர்வதுடன் தேசியரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகளும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இவற்றில் நீங்கள் விரும்பும்துறையில் இணைந்து கொள்ள ஆர்வம் உள்ள வர்கள் புதிய அலை கலைவட்டம் இல 64-145 சங்கமித்தை மாவத்தை கொழும்பு-13 என்ற அஞ்சல் முகவரியுடனும் puthiyaalaikalaivaddam1980@gmail.comஎன்ற ஈமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலதிக விபரங்களைப் பெற 0722780276, 0766249108, 0776274099, 0777412604, என்ற அலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ளலாம்.