பொதுவாகவே புரட்சிகரமான படைப்புக்களை நாம் பார்த்ததுண்டு.ஆனால் சில உரிமை குரலுக்காக குரல் கொடுக்க கூடிய படைப்புக்களை நாம் பார்ப்பது அறிது.
அந்தவகையில் இலங்கை சினிமாவின் இன்றியமையாத பெயர் பவனீதா லோகநாதன்.
தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று இலங்கை தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு பெண்ணாகா மாறியுள்ளார்.
தற்போது புதிய படைப்பு ஒன்றுடன் களமிறங்குகிறார்.அது தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் அவர் சிறப்பு பதிவொன்றை இட்டுள்ளார்.
இன்று அம்பேத்கர் பிறந்த நாள்.சீரிய சிந்தனையும் போர்க்குணமும் உலகை மாற்றும் என்று கற்றுத்தந்தவர். இந்த சமத்துவ நாளில்சமத்துவத்துக்கான சிறுபான்மையினரின் குரலாக உருவாகும் எனது படைப்பை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி!மறைக்கப்பட்ட வரலாற்றை கொண்ட சமுகம், தன் வரலாற்றை தானே எழுதிக் கொள்ளும்.
ஆம், இது என் நேரம்! ஒட்டுமொத்த வாழ்வுக்கும் சினிமா போதும் என்று நினைத்திருக்கையில் எனக்கான கலை ஆயுதத்தை கையில் கொடுத்தது காலம்! பெயரற்ற முகமற்ற நிலமற்றவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்த புதிய படைப்புகளை உருவாக்கியிருக்கிறேன்.
Graphic Novels – காமிக்ஸ்களையும் கிராஃபிக் நாவல்களையும் தேடித்தேடி படித்திருந்தாலும் நானே ஒருநாள் அதை உருவாக்குவேன் என்று நினைக்கவில்லை. நாடுமுழுவதும் சிதறியுள்ள மலையக சிறுபான்மை பெண் கதாப்பாத்திரங்களை முன்னிறுத்தி 5 கிராஃபிக் நாவல்களையும் 5 அனிமேஷன் குறும்படங்களையும் மும்மொழிகளில் எழுதி இயக்கி தயாரித்து வருகிறேன்.
நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் இந்த Projectஐ மிகக்குறுகிய காலத்தில் தனி ஒருத்தியாக தயாரித்து வருவது சுவாரஸ்யமான சவால்.இந்த சவால் மிக்க பயணத்தில் என்னுடன் துணை நிற்கும் அத்தனை கலைஞர்களையும் விரைவில் அறிமுகப்படுத்துகிறேன்.
புறக்கணிக்கப்பட்டவர்களின் சமத்துவக்குரல் ஓங்கி ஒலிக்கும்.எதிர்பாருங்கள்…அவரது இந்த முயற்சி வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்