ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பதவிக்கு, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆராய்ச்சியை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.