சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீலங்கா வாய்ஸ் நிகழ்ச்சியில் நமது பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜிதேந்திரா கலந்துகொணடார்.
அவர் பங்குபற்றும் பிளைன்ட் ஒடிசன் இன்று நடந்தது.அவரது பாடலுக்கு நான்கு நடுவர்களின் மூன்று பேர் திரும்பினார்கள்.
பாதிய சந்தோஷ் , கசுன் கல்ஹார மற்றும் ஷானிகா ஆகியோர் தங்கள் அணிக்கு ஜிதேந்தராவை அழைத்த போதும் அவர் பாதிய சந்தோஷ் அணியில் சேர விருப்பம் தெரிவித்தார்.
ஜிதேந்திராவின் பாடல் அனைவரையும் மகிழ்வித்தமை சிறப்பு.இந்த போட்டி தொடரில் ஜிதேந்திரா முன் செல்ல நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்