நாவிதன் வெளிப்பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான ஆற்றலை வளப்படுத்தும் நோக்கிலும் தலைமைத்துவ அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் எதிர்பார்ப்பிலும் Srilanka Unites மூலமாக நடாத்தப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கான பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த தலைமைத்துவ பயிற்சி செயலமர்வினை srilanka unites அம்பாறை மாவட்ட திட்டப்பொறுப்பாளர் திரு.சினான் சிறப்பாக நடாத்தியிருந்தார்.செயலமர்வு கமு/சது/நாவிதன்வெளி/அன்னமலை மகாவித்தியாலயத்தில் இன்று 2021.03.14 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 02.30 மணி முதல் 5.00 மணி வரை நாவிதன்வெளிப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களைச்சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
நேரான தலைமைத்துவத்திறனை வளர்த்துக்கொள்வதற்காக முன்மாதிரியான சமூகத்தினை கட்டியெழுப்பும் இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ருவுதரன் சந்திரப்பிள்ளை உள்ளிட்ட ஏற்பாட்டு குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்