வெளிநாட்டுக் கொழுந்து வெளுத்து வாங்குது


வெளிநாட்டுக் கொழுந்து என்ற பெயரில் 14 நிமிடங்களை கொண்ட தமிழினியன் பிரபாகரன் படைப்பு இன்று வெளியாகியுள்ளது.

பதுளையில் இருந்து இப்படி ஒரு படைப்பு வெளியாகி இருப்பது வரவேற்க தக்க விடயம்.

இந்த படம் தொடர்பாக தமிழினியன் பிரபாகரன் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கொழுந்து பாடசாலை அதிபராக மாணவர்களின் சிதைவுகளுக்கு காரணங்களை தேடியதில் கிடைத்த ஒரு மிக முக்கிய காரணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு சிறுகதையினை திரைக்கதையாக்கி உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு.

மூன்றுவருடங்களுக்கு முன் இதற்கான முயற்சியில் இறங்கினாலும் சரியான களம்,உதவி கிடைக்காத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டு அண்மையில் கிடைத்த வாய்ப்பையும் உதவிகளையும் பயன்படுத்தி முடிக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படம்.

இதில் பங்கேற்ற கலைஞர்களில் பிரதான பாத்திரமேற்ற நடிகர்களை தவிர ஏனைய அனைத்து தரப்பினருக்கும் இது முதலாவது முயற்சி.
நானுட்பட.

அந்தவகையில் தொழில்நுட்ப ரீதியான குறைகள் ஆங்காங்கே குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கும்.

அது தவிர்த்திருக்க கூடிய விடயம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அடுத்த முறை முயல்கிறோம்.

இதுவரை முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழினியன் பிரபாகரன் தனது நன்றிகளை தெரிவித்து என் தரப்பு விளக்கங்களை ஏற்புரையினை முன்வைக்க கடமைப்பட்டுள்ளார்.

சிறுகதையினை திரைக்கதைக்கு மாற்றும் போது சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப சில விட்டுக்கொடுப்புகள் மாற்றங்களை செய்யவேண்டியேற்பட்டது.

செலவு,மற்றும் கலைஞர்களின் அனுபவமும் அதில் ஆதிக்கம் செலுத்தியது.படப்பிடிப்பு வெறும் ஒரு நாளில் எடுத்து முடிக்கப்பட்டதும் சில குறைகள் ஏற்படக் காரணமாகும்.

கதாநாயகியின் வயதும் மூன்று குழந்தைகளுக்கு தாயென்பதும் சற்று இடறுவதாக ஒரு விமர்சகர் கூறியிருந்தார்.

ஆமாம் அதுவும் இக்கதையில் மறைமுகமாக மலையகத்தின் ஒரு அவலத்தை காட்டவே பயன்படுத்தப்பட்டது.அதனை யாரும் உணரவில்லை.

அதாவது பள்ளியில் இளவயதுக் காதலால் கல்வியைத் தொலைத்து விட்டு வாழ்க்கையினை சீரழித்துக் கொண்ட இரண்டு பேரினை அதன்மூலம் குறியீடாக காட்ட விழைந்தோம்.

அடுத்ததாக இடையில் அந்த மூன்றுவருடம் நடந்த விடயத்தையும் காட்டியிருக்கலாம் என்றார்கள் சிலர்.ஆனால் பார்வையாளனின் சுய சிந்தனை கற்பனையில் அதனை ஊகிக்க விடுவது தான் படைப்பின் இன்னொரு பண்பு.

அத்துடன் ஒரு குறுந்திரைப்படத்தில் அதனையெல்லாம் காட்டுவது என்பது மிகையான விடயமாவதுடன் சொல்ல வந்த விடயத்தின் அழுத்தத்தினை குறைத்தும் விடும் என்று கருதினேன் .

இதனை எனது கற்பனைக்கேற் வகையில் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவுக் கலைஞர் ராசிக்,கதையினை சீராக தொகுத்து ஒலியமைப்பினை நெறிபடுத்திய தொகுப்பாளர் தயாரூபன்,மிக அற்புதமாக இசைவழங்கிய இசையமைப்பாளர் ஜெரான்,பாடகி மேனுஷா மற்றும் பிரதான பாத்திரமேற்ற சத்யா,முரளி இருவர் உட்பட துணை நடிகர்கள் அனைவருக்கும் இதற்கு களம் கொடுத்து உதவிய ஹொப்டன் கஜன்,குகன்,குணா ஆகியோருக்கும்,மிக முக்கியமாக இதற்கெல்லாம் பின் பலமாக நின்றுதவிய u one mediaநிறுவனர் பிரகலாதனுக்கும் என் நன்றிகள் என தமிழினியன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழினியன் பிரபாகரன் மற்றும் பட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!