மகளீர் தினத்தில் மதிசுதாவின் மனையாள்

மகளீருக்கான மதி சுதாவின் குறும்படம் இணைய வெளியீட்டுக்குத் தயாராகின்றது.

2018 இன் ஆரம்பத்தில் GIZ க்காக மதி சுதா இயக்கியிருந்த “House Wife” – மனையாள் என்ற குறும்படத்தை , 8 ம் திகதி வரும் மகளீர் தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என நினைத்துள்ளார்.

நாளை (06.03.2021) அன்று இரவு 7 மணிக்கு எனது பேஸ்புக் பக்கத்தில் இக்குறும்படத்தை வெளியிடப்படுகிறது.

இதற்கான முதற் தொடர்பைக் கொடுத்த சுகேசன் அவர்களுக்கு மதி சுதா நன்றியை தெரிவித்துள்ளார்.

இப்படம் முழுமையடைய முழுக் காரணமாக இருந்த நிரஞ்சலன் இருந்திருக்கிறார்.

இக்குறும்படத்துக்கான கதையை நிரஞ்சலன் அவர்கள் எழுத அவருடன் சேர்ந்து மதி சுதாவும் திரைக்கதையை செதுக்கியிருக்கிறார்கள்.

இப்படைப்புக்காக உழைத்த படைப்பாளிகள்
கதை – நிரஞ்சலன்
திரைக்கதை – மதிசுதா, நிரஞ்சலன்
ஒளிக்கவ்வல் – சன்சிகன்
கத்தரித்தொட்டல் – மதுரன் ரவீந்திரன்
இசைச் செருகல் – ஜெல்சின்
ஒலிக்கலவை – ராபட்
உதவி இயக்கம் – மகிதரன்
குரல் பின்னணி – வினோத் , வனிதா
பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள் –
பிரியதர்சினி , கலீஸ் , இதயராஜ் , வேழினி , கிதுர்ஜன், கேஎஸ்எஸ் ராஜ், ஜின்சி , தினேஸ்

மனையாள் குறும்பட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!