சூரியனில் இருந்து விடைபெற்றார் கஸ்ட்ரோ ராகுல்

சூரியனில் தான் விலகியதாக அறிவிப்பாளர் கேஸ்ட்ரோ அறிவித்துள்ளார் நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கேஸ்ட்ரோ தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

09 வருட சூரியனின் ஊடகப் பயணத்தில் இருந்து விலகிவிட்டேன் !! ( 01.03.2021 ) அன்பைத் தந்தவர்களுக்கும், ஆதரவை வழங்கியவர்களுக்கும் என் நன்றிகளும் மகிழ்ச்சியும். அத்தோடு என் நிகழ்ச்சிகள் பற்றியதான உங்களின் ஞாபகப்படுத்தல்களும் என்றும் என் மனதில் இருக்கும், !! ❤️

சுய விருப்பமும் + தனிப்பட்ட காரணத்துக்காகவும் சூரியனில் இருந்து விலகியிருக்கிறேன் !!

09 ஆண்டுகாலம் சூரியனில் எனக்கு சொல்லிக் கொடுத்தவையும் கற்க வைத்தவையும் ஏராளம். அத்தனைக்கும் நன்றிகள், பல கடினமான நேரங்களிலும் இறுக்கமான சூழ்நிலைகளிலும் முழு மனதோடும், முழு திருப்தியோடும் அதீத பற்றுடனும் என் சூரியக் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றியது என் நினைவுகளில் எப்போதும் பரவிக்கிடக்கும் பொக்கிசம்!!

அதற்காக ஒரு வானொலி ஊடகவியலாளனாக என்றுமே பெருமை கொள்வேன்!! என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான வாயப்புக்களை தந்து என் வளர்ச்சியில் சக பங்கெடுத்த அண்ணன் Vaamalosanan Loshan Ragupathy Balasridharan க்கு என் நன்றிகளும் கடமைகளும் மாறாத பிரியங்களும் !! இறுதியாக எங்கே வானொலியில் குரல் கேட்கவில்லை என்ற பலபேரின் அக்கறையின் அறிதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !! ❤️🙏 என்றென்றும் உங்கள் அன்பின் – கஸ்ட்ரோ ராகுல்

அவரது எதிர்கால ஊடக பயணத்திற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!