ஊடகவியலாளர்கள் தமிழில் எழுதும் போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஆதித்தன் தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியுள்ளார்.இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து என்பதால் நாம் அதை எமது இணையத்தளத்தில் மறு பதிவு செய்கிறோம்.
இந்த செய்தியின் உள்ளடக்கத்தை விடுத்து, அது எப்படி எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அலசிப்பார்த்தால், இன்றைய ஊடகவியலாளர்களின் ’மொழி சார் கவனயீனம்’ புலப்படும். தலைப்பில் “50% கழிவு வழங்கப்படும்” என்று உள்ளது.
உள்ளே செய்திக்குள் ”50 வீத வியாபாரக் கழிவு வழங்கப்படும்” என்று உள்ளது. எந்த வரியில் இருந்து இந்த கழிவு வழங்கப்படும் என்றோ…, அல்லது மாநகர சபைக்கு ஒரு வியாபார ஸ்தாபனம் செலுத்தியாக வேண்டிய எந்த கட்டணத்திலிருந்து இந்த கழிவு வழங்கப்படும் என்றோ, இச்செய்தி குறிப்பிடவில்லை.
மாறாக, வெறுமனே கழிவு / வியாபாரக்கழிவு எனக் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கும்? வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டு இனிப் பயன்படாதென எஞ்சிய கழிவைக் குறிக்கலாம். பயன்படுத்த முடியாதவை என்று ஒதுக்கப்பட்ட பொருட்களைக் குறிக்கலாம்.
ஆனால், யாழ். மாநகர சபை தனது தீர்மானத்தில் இவ்வகையான கழிவுகள் குறித்தா சுட்டிக்காட்டியுள்ளது? இல்லை. ஊடகவியலாளர்கள் தமிழில் எழுதும் போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கருத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் ஆதித்தனுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்