தனது குரலால் நேயர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் கருப்பையா நாகபூசணி .

அவரது வானொலி துறை ஆர்வம் அவரின் மீது பல நேயர்களை ஈர்க்க வைத்தது.
அவரது குரல் மட்டுமல்ல அவரது விரல்களும் பேச ஆரம்பித்துவிட்டது.
தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக அன்மையில் தான் பதவியேற்றார் நாகபூஷணி கருப்பையா .
நாகபூஷணி கருப்பையா எழுதிய “மலையக சிறுகதைச் சிற்பி என். எஸ் எம். ராமையா’ என்ற நூலை வடிவமைத்துள்ளார் .

என். எஸ் எம். ராமையா அவர்கள் மலையக வரலாற்றில் பேசப்பட்டவர்

அவருக்காக நாகபூஷணி கருப்பையா நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு கொழும்பு விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இலக்கிய துறையில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நாகபூஷணி கருப்பையா அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள் .