தினகரனின் கலைகளின் சங்கம விழாவில் கௌரவிக்கப்படவுள்ள எமது கலைஞர்கள்

ஹட்டன் தினகரன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 19.04.2025 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் மத பெரியார்கள். தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். உதவி ஆசிரியர்கள். பிராந்திய செய்தியாளர்கள். ஊடகவியலாளர்கள். சமூக வலைதள ஊடகத்தினர்கள். கல்வியாளர்கள்.பல்துறை கலைஞர்கள். அனுசரணையாளர்கள். நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அன்றைய தினம் ஆசியுரைகள். சிறப்பு சொற்பொழிவுகள்.
கலை கலாசார நடன நிகழ்வுகள்.

விருது வழங்கும் நிகழ்வுகள். கௌரவிப்புகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே வேளை தினகரனின் கலைகளின் சங்கம விழாவில்
திருமதி தனுஜா சிவரூபனின் சீடி வெளியீடு


ஹட்டன் வாசகர் வட்டத்தின் செயலாளரும் பொறியியலாளருமான திருமதி தனுஜா சிவரூபன் திவ்ய சங்கீதம் என்ற தலைப்பில் ஒரு சீடியை வெளியிடவுள்ளார்.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல. அதில் பிரதான பாடல் ஒன்றுதான் திவ்ய சங்கீதம். இது இதயத்தை உருக வைக்கும் இனிமையான ராகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அழகிய நவீன கர்நாடக சங்கீத பாடல்.

இதன் மெட்டும், நடனமும் சேர்ந்து ஆனந்த உணர்வை தரும் வகையில் இசைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு அழகிய இசையமைப்பை சர்ஸ்டீன் வழங்கியுள்ளார். இந்தப் பாடலை அன்புமலருடன் இணைந்து இவரும் படியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா நடனப் பள்ளியின் இயக்குநர் திருமதி. R. சித்திர பிரியா சிறப்பான ஒரு நடன காட்சியமைப்பை இதற்கு அமைத்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா நடனப் பள்ளியின் மாணவர்களான M. விபிஷா, L. திருக்க்ஷி லோகேஷிகா,K. மகாஸ்ரீ சாஷ்மிகா ஆகியோர் நடனமாடியுள்ளார்கள்.

இவ்வாறு இந்தப் பாடல் சிறப்புற பங்களிப்பு செய்த அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களது பெற்றோர்களும், இந்த முயற்சிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

இந்தப் பாடல் CD எதிர்வரும் 19ஆம் திகதி ஹட்டனில் நடைபெறும் தினகரனின் கலைகளின் சங்கம விழாவில் வெளியிடப்படவுள்ளது.

இந் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஹட்டன் தினகரன் வாசகர் வட்டத்தின் தலைவி திருமதி.விஜயகுமாரி வாமதேவன் அவர்களும். செயலாளர் திருமதி.தனுஜா சிவரூபன் அவர்களும் மேற் கொண்டு வருகின்றார்கள்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஏற்பாட்டு குழுவினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!