அம்புலு முழு நீள திரைப்படத்தை எமது இணையத்தளம் மறந்துவிட்டதாக இணையத்தில் எம் மீது சுமத்தபட்டு வரும் குற்றச்சாட்டுகள் நியாயமானவை.
ஒரு படைப்பாளனுக்கு வர கூடிய நியாயமான கோபமும் , மன உளைச்சலும் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.
அம்புலு முழு நீள திரைப்பட குழுவிற்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்.
பக்கசார்பாக நாம் செயற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுதப்படுகிறது.சிலரால் எம்மை பற்றிய இரண்டாம் நிலை விமர்சனங்கள் தொடர்ந்தும் எழுதப்பட்டு வருகிறது.
விமர்சனம் எழுதுபவர்களுக்கு பதிலளிக்கும் மன நிலையில் நாம் இல்லை.
இருப்பினும் இப்படத்தின் இயக்குனர் சுதர்சன் ரத்னம் , படத்தொகுப்பாளர் இளங்கோ சிரில் ஆகியோர் தொடர்பாக நாம் பல செய்திகளை இதற்கு முன் பதிவேற்றி இருந்தாலும் அம்புலு தொடர்பான செய்திகளை நாம் இதுவரை பதிவேற்றவில்லை என்பது உண்மையே.
படத்தின் ட்ரைலர் கடந்த 12 ஆம் திகதி வெளியாகியது.AR ப்ரொடக்சன் மற்றும் அஜீபன் ராஜ் ஆகியோரின் தயாரிப்பில் அம்புலு தயாராகிறது.
இணை இயக்குனராக கார்த்திக் சிவா மற்றும் ஒளி ஒளிப்பதிவை அஜீபன் ராஜ் , படத்தொகுப்பை இளங்கோ சிரில் இவர்களுடன் ருவின் பிரசாத் இசையமைத்துள்ளார்.
அனு சத்தியசீலன் ஆடைகளை கவனிக்க , கலை அம்சத்தை வின்சன்ட் செய்துள்ளார் .ஒப்பனையை முருகேசு சுவிகாரனும் , பாடலுக்கான ஒப்பனையை அண்டர்வ் ஜூலியஸ் , நீதன், கார்த்திக் சிவாவின் சண்டை பயிற்சி ,கார்த்திக் சிவா கண்ணா உதே யின் நடனம் என அம்புலு அமர்க்களமாக வெளியே வருவான்.
பிரசாரா வடிவமைப்பை ஜது கவனிக்க MSK சுவிகரன் அசோசியேட் இயக்குனாராகவும் , இணை இயக்குனராக டலசன் ராதாமோகனும் ,அமல்தாஸ் லிவிங்க்டோன் , அருள் சிந்து , சுகந்தா அஷ்வின் மற்றும் மக்கள் தொடர்பை கிரி ரத்னம் கவினித்துள்ளார்கள்.
அம்புலு பட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்