ராகுல் இன் வரிகள் மற்றும் நடிப்பில் கமலின் இயக்கத்தில்
Shameel J குரல் மற்றும் இசையில்
கனவு பெண்ணே காணொளிப்பாடல் ஷமீல் Youtube தளத்தில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது.
பல திறமைகளை தன்னகத்தே கொண்டு தன்னை மிளிர வைக்க துடித்துக்கொண்டிருக்கும் , இளம் கலைஞர் ராகுலுக்கு பலர் தங்கள் பாராட்டு மற்றும் வாழ்த்து போன்றவற்றை அல்லி வழங்கி வருகின்றனர்.
பாடல் காட்சிகள் மலையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கனவு பெண்ணே பலரை மலையக பக்கம் அழைத்து செல்கிறாள் இந்த பாடலின் மூலம்.
ராகுலின் நடிப்பு சற்று பதற்றமாக இருந்தாலும் காட்சிகளை சிறப்பாக கையாளுகிறார்.
ஷமீலின் இசைக்கு சொல்லவே தேவையில்லை.அருமை என்ற வார்த்தைக்கு ஷமீலின் இசை உதாரணம்.
இன்னும் மென்மேலும் ராகுல் கலை துறையில் வளர்ந்து செல்ல நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்