வானொலி துறையில் புதிய எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பமாகவுள்ள 99.5 / 99.7 FM அலைவரிசை வானொலிக்கு அறிவிபாளர் ஹோஷியா அனோஜன் தலைமை தாங்குகிறார்.
தமிழ் வானொலிகளில் அசைக்க முடியாதவர்களும்,ஆணி அடிச்சவர்களும் இருக்கும் போது புதியதாக வரும் வானொலிகளுக்கு இவர்களுடன் போட்டி போட வேண்டி உள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமிழ் FM ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பழைய 99.5/99.7 FM அலைவரிசையில் புதிய வானொலி விரைவில் ஆரம்பமாக இருக்கும் நிலையில் யார் யார் எல்லாம் இந்த வானொலியில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
சக்தி ,வர்ணம் ,ஸ்டார் தமிழ் வானொலிகளில் பணியாற்றிய ஹோஷியா அனோஜன்
வெற்றி ,வர்ணம் ,ஸ்டார் தமிழ் வானொலிகளில் பணியாற்றிய
கேபிடல் வானொலியில் பணியாற்றிய கவிராஜ் கடந்த வாரம் இணைந்துகொண்டார்
சக்சிவர்ணன்
சூரியன் ,வர்ணம் வானொலிகளில் பணியாற்றிய ராமசாமி ரமேஷ்
சக்தி ,ஸ்டார் தமிழ் வானொலிகளில் பணியாற்றிய அப்ஷான்
சக்தி டிவி , UTV , ஸ்டார் தமிழ் வானொலிகளில் பணியாற்றிய டில்ஷாட்தேவதாஸ்
ஸ்டார் தமிழ் வானொலியில் பணியாற்றிய கிரிஜா தியாகராஜா
இளமை வானொலியில் பணியாற்றிய ரிஜய் ஆகியோர் இதுவரை புதிய வானொலியில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல சவால்களை இவர்கள் சந்திக்க வேண்டி வரும் .காரணம் ஏற்கனவே இந்த அலைவரிசையை கேட்டு தற்போது வேறு அலைவரிசைகளை கேட்பவர்கள் அனைவரையும் மீண்டும் இழுத்தெடுக்க வேண்டுமல்லவா?
எது எப்படியோ புதிய அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்