எதிரவரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கும் பாடல்களில் மது ஸ்டாலின் இயக்கத்தில் காப்பச்சீனோ பாடலும் இடம் பிடிக்கிறது.
ரஜீவனின் மற்றுமொரு MUSIC ALBUM மான இந்த பாடலை தமிழரசி பெருமையுடன் வழங்குகிறார்.
தக்ஷன் மற்றும் ஜெனி ஆகியோரின் நடிப்பில் பிரகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு சீலன் ,மகிந்தன் , மதுபாலன் ஆகியோர் இணை இயக்குனர்களாக தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள்.
அனோஜன் , கஜன் , ஆகியோர் துணை இயக்குனர்களாக கடமை புரிந்துள்ளனர்.
கலை வடிவத்தை MS மற்றும் வின் ரெகார்ட் டீம் கவனித்துள்ளார்கள் .
இணை ஒளிப்பதிவில் ஆரணியன் செயற்பட லைட்டிங் வசதியை தீபன் ,கரிகாலன் ,ரோஷன் ,மணி ,விதுஷன் ,அபி ஆகியோர் கவனித்துள்ளார்கள்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்