Sky Media Network நிறுவனத்தின் புதிய தமிழ் வானொலி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த வானொலிக்கு இலங்கையின் தேசிய விருது பெற்ற புகழ் நிறைந்த பெண் அறிவிப்பாளர் ஹோஷியா அனோஜன்தலைமை தாங்குகிறார்.
99.5 99.7 FM தற்போது பரீட்சார்த்த ஒலிபரப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல வானொலியின் ராத்திரியின் சொந்தக்காரன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அப்ஷான் 99.5FM யின் பதிவை பகிர்ந்துள்ளார்.இவரும் புதிய வானொலியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றுமொரு தனியார் வானொலியில் செய்தி ஆசிரியராக இருந்து தேசிய விருது பெற்ற டில்ஷாட் தேவதாசும் புதிய வானொலியின் முகப்புத்தக பதிவை பகிர்ந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்