வசந்தம் டிவியின் TRENDING ல விடுங்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்தி பவர் ஸ்டார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.
இதில் அவர்கள் எடுத்துக்கொண்ட கான்செப்ட் யாரையோ அல்லது எவரையோ தாக்குவது போல் இல்லாமல் நேரடியாகவே குறிப்பிட்ட தொலைக்காட்சி சேவையை சுட்டி காட்டுவதாக அமைந்திருந்தது.
இவர்களது இந்த நிகழ்ச்சி தொடர்பாக முகப்புத்தகத்தில் ரசிகர் ஒருவர் இட்ட பதிவு.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா….. என் மனசுல இருந்தத அப்படியே படம் புடிச்ச மாதிரி இருக்கு. அதுலயும் சில விஷயங்கள் சிம்பாலிக்கா சோன்னீங்க பாருங்க அது செம்ம….ஆனா ஒன்னு நாங்கெல்லாம் ஊர்வசி புது வசந்தம் தொலைக்காட்சியில் மேக்கப் இல்லாம படிக்கும் போதே பெரிய ரசிகர்கள்.
அந்த நிகழ்ச்சி பார்க்காட்டியும் அவங்க படிக்குறத பார்த்து சைட் அடிப்போம். சுவத்துக்கு வெள்ள அடிச்ச பிறகு மறுஒளிபரப்பு சற்று டொங்களாக தான் உள்ளது. அது சிங்கிள் சோதனை அதைவிடுவோம். ஆனால் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் என்ன நல்லாவே பார்த்து பண்ணுங்க.
கண்டன்ட் போவதில்லை என்றால் நானே அறிய பல விடயங்களை தருகிறேன். சந்தோஷம் தாங்க முடியல ப்ரோ….Waiting for version 2.0 in next week…அப்படி பல சீசன் போங்க
அவர்களுக்கு தரப்பட்ட 30 நிமிடத்தில் யாரையாவது கழுவி காட்டவேண்டும் என்ற வேலையை கச்சிதமாக முடித்துள்ளார்கள்.
நிகழ்ச்சி குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்