‘தமிழ்ச்செல்வி’ எனக்கு திருப்தி தரக்கூடிய வகையில வந்திருக்கு – வரோதயன்

ஆதவன் தொலைகாட்சியின் தயாரிப்பாளர்
கனகநாயகம் வரோதயன்
குறும்படத்தின் இயக்குனராக களமிறங்கும்
‘தமிழ்ச்செல்வி’ குறும்படத்தின் முன்னோட்டக்காட்சி இந்தவாரம் இணையத்திற்கு வரவுள்ளது .

தனது தமிழ்ச்செல்வி குறும் படம் தொடர்பாக தனது முகப்புத்த்க பக்கத்தில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார் .’Thamilchelvi’ trailer from this Friday (22)
‘தமிழ்ச்செல்வி’ என்னோட மூன்றாவது குறும்படம். நான் இயக்கும் 5ஆவது குறும்படம். 
Short film, Award, Competition, Festival எண்டு நினைச்செல்லாம் நான் படம் எடுக்கிறேல்ல. என்னோட ஒவ்வொரு குறும்படமும் ஒரு முழுநீள சினிமாவுக்கான பரீட்சார்த்தங்கள் தான். அதனால தான் இப்பிடி 1st look, 2nd look, 3rd look, teaser, trailer என வெளியிட்டு மகிழ்வது. ‘இலவு’க்கும் ‘தமிழ்ச்செல்வி’க்கும் இடையில 5 வருச இடைவெளி. (இடையில எடுத்த ‘உன் விழிகளில் விழுந்த நாள் முதல்’ கிடப்பில் இருக்கு). ஏன் இந்த இடைவெளி? எல்லா கலைஞர்களை போலவும் ‘பணம்’ ஒரு பிரச்சனையா இருந்தாலும், அது முதற்காரணம் அல்ல. அதைப்பற்றி எல்லாம் விரிவா எழுதலாம். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில பார்ப்பம். இப்போதைக்கு ‘தமிழ்ச்செல்வி’ நல்லா, அதேநேரம் ஓரளவு எனக்கும் திருப்தி தரக்கூடிய வகையில வந்திருக்கு. விரைவில் படம் லண்டனில் திரையிடப்படவுள்ளது. யாழ்ப்பாணம் & கொழும்பிலும் காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமா முன்னெடுக்கப்படுகுது. அப்புறம் தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ப சில விருது விழாக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கு…
தமிழ்ச்செல்வி – இது எங்கட கதை.

கர்ணன் படைப்பகத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ்ச்செல்வி’ குறும்படத்தின் முன்னோட்டக்காட்சி (Trailer) இந்தவாரம்…
இயக்கம் – கனகநாயகம் வரோதயன்
ஒளிப்பதிவு – நிஷாந்தன் இராஜகுலசிங்கம்
படத்தொகுப்பு – ஆர்.டி.ராஜ்
இசை – அருணன்
நடிப்பு – சபேசன் சண்முகநாதன் | மகேஸ்வரி ரட்ணம் | நிவி | லாரா மற்றும் பலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!