இரண்டாவது வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சக்தி வானொலிக்கு பத்து விருதுகள் கிடைத்தது.
இந்த விருதுகள் பெற்ற அனைவரும் சக்தி தொலைகாட்சியில் நேரடி நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்திருந்தனர்.
”சக்தி வானொலியின் நிகழ்சிகளில் தரம் மற்றும் தொழிநுட்ப ரீதியாக தயாரிப்பு நடக்கிறது .எமது நிகழ்சிகள் தனித்துவமானவை .மக்கள் மத்தியில் இலகுவாக பிரபலமடைய கூடியவை .நாம் எப்போதும் விருதிற்காக நிகழ்ச்சி படைத்ததில்லை. எமது நிகழ்சிகளே எமக்கு விருதை கொண்டு வந்து தருகிறது” என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அலைவரிசை பிரதானி அபர்னா சுதன் தெரிவித்தார் ‘.
சக்தி வானொலிக்கு
வானொலி அரச விருது வழங்கல் விழாவில் கிடைத்த விருதுகள் .
சிறந்த ஆரம்ப விளம்பர குறியிசை கனகராசா மயூரன் Mayuran Kanagarasa
சிறந்த வானொலி ஆவணப்படுத்தல் நிகழ்ச்சி – ஞானகுமாரன் கணாதிபன் Ganadhipan Gnanakumaran (vanakkam thayagam)
சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்ச்சி ஜஶரி விசேட விருது – வனிதா பரமேஸ்வரன் Vanitha Parameswaran (facebook thozha)
சிறந்த வானொலி வினாவிடை நிகழ்ச்சி – ஞானகுமாரன் கணாதிபன்
சிறந்த வானொலி நாடக நடிகர் – பாக்கியராஜா கீர்த்தனன் Geerthanan Packiyarajah
சிறந்த வானொலி நாடக பிரதியாளர் – R. P. Abarnasuthan abarna
சிறந்த வானொலி நாடக தயாரிப்பு – வேள் பிரஜீவ் Prajeev Verl
விருதுகளை தன்வசப்படுத்திய சக்தி குடும்பதிற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.