பொதுவாகவே நமது தமிழ் கலைஞ்சர்களுக்கு சிங்கள படைப்புகளில் தங்கள் திறமையை வெளிக்காட்டுவது கொஞ்சம் கடினம் தான்.
ஆனால் சிலருக்கு இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி இருக்கும் நிலையில் வாய்ப்புகள் வந்து குவிகிறது.
சக்தி டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற இஷிதா பிரேம்நாத் தனது திறமையின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டார்.
பிறகு இவ்வருடம் சிரச டிவியில் நடத்தப்பட்ட Voice டீன் நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்றார்.அதன் மூலமாக அனைவர் மத்தியிலும் இஷிதா பேசப்பட்டார்.
தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகும் விதத்தில் இஷிதா தனது முதலாவது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறர்.அதுவும் சிங்கள மொழியில்.
திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30க்கு சிரச டிவியில் ஒளிபரப்பாகும் சல்மால் ஆராமாய தொடரில் நடித்து வருகிறார்.
இவரது சிங்கள மொழி தேர்ச்சிக்கு கிடைத்த பெரிய ஒரு சந்தர்ப்பம் ஆகும்.
இஷிதா பிரேம்நாத் க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்