BORDER கதையும் சமிந்தனின் வெற்றிகளும்

நல்ல கதைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியிலும் படைப்பாளிகள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருக்கிறது.

அதிலும் விருதுகள் பல பெற்ற இயக்குனர்களின் கைவரிசை என்றால் சொல்லவே தேவையில்லை.

அப்படி அனைவராலும் பாராட்ட பட்ட படைப்பு தான் போடர்.சமிந்தனின் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விருதுகள் வந்து குவிந்தன.

அனைத்து விருதுகளும் சர்வதேச விருதுகள் தான்.இஅவ்வளவு விருதுகள் ஒரு படைப்புக்கு கிடைக்கின்றது என்றால் அது உன்மையில் நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய ஒன்று.

படைப்பு தொடர்பாக இயக்குனர் சமிந்தன் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்.

ஒவ்வொரு படைப்பிற்கு பின்னாலும் பல தடைகள், வலிகள் உண்டு.
அவ்வாறே நாங்களும் கடந்தோம்.
நடு இரவு, குளிர், காற்று, ஆழ் கடலின் மேல் படப்பிடிப்பு என ஒரு புறம் கவனம் செலுத்த மறுபுறம் கடற்படையின் அன்புத்தொல்லை துரத்தும். ஆழ் கடல் கீழ்/மேல் காட்சி உருவாக்கத்தின் போது எவ்வித பதுகாப்பு கருவிகளும் இல்லை நம்பிக்கையை தவிர.


படத்தின் உயிர் கதையும் கருவும், உயிர் கொடுத்தவர்கள் படைப்பின் தயாரிப்பாளர் பா.பார்தீபன் Partheeban Baskaran அண்ணன், பிரதான கதாபாத்திரம் சூசை (சங்கர் Sri Shanker) ஒளிப்பதிவாளர் நட்பு சிவராஜ் Raj Sivaraj, இசையமைப்பாளர் ஸ்டாலின் Jerry Stalin, துணை நடிகர்கள், சக தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்.

இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டு, 3 வருட பட முன்னாயத்தம்(Pre-Prodution), 6 மாத தயாரிப்பு, 3 வருட காத்திருப்புடன் இதோ உங்களை சந்திக்கின்றோம்.
ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பர்க்கின்றேன். ஆதரவு நல்கி உங்கள் பார்வைக்கு இதோ “எல்லை” – “The Border”.

BORDER படைப்புக்கு பணியாற்றிய அனைவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!