கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து மத பூஜை வழிபாடுகள்…..கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரை இலங்கை மாத்திரமன்றி முழு உலகமும் பாரிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.
இவ்வாறான சூழலில் கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டு உலக வாழ் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரார்த்தித்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெருக்கடி நிலைக்கு மத்தியில் நாட்டின் அனைத்து ஆலயங்களிளும் வழிபாடுகள் செய்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிர்வாதமும், பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கொட்டக்கலை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இன்றைய தினம் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந், பிரதேச சபையின் உறுப்பினர்கள்,நகர வர்த்தகர்கள் எனப் பலர் கலந்துக் கொண்டனர்.