பிஸ்ரின் பதிவிட்ட முகப்புத்தக பதிவு
பெரும்பான்மை ஊடகங்கள் பற்றிய நிறைய விமர்சனங்கள் எம்மவர் மத்தியில் உள்ளன. ஆனால் கஷ்டமான நிலை வரும் போதுதான் மனிதர்களை புரிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அப்படியாக சகோதர ஊடக நிறுவனம் சுவர்ணவாஹினி தனிமை படுத்தலில் இருக்கும் எமது குழுவினருக்கு ஒரு தொகை பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்கள்.
இனம் மதம் மொழி இவற்றை எல்லாம் தாண்டி இந்த நாட்டில் மனிதம் வாழ்கிறது.கூடவே இருப்பவர்கள் கூட சாப்பிட்டிர்களா என்று கேட்காத உலகத்தில் சக சிங்கள ஊடக நண்பர்கள் இப்படியான உதவியை செய்தது பாராட்டத்தக்கது. இனத்தால் மொழியால் வேறுபட்டாலும் ஊடகம் என்ற உறவு எம்மை இணைத்து வைத்துள்ளது.