சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் வேகமாக பரவி வரும் பந்தயம் தான் #5differentlookchallenge 5 விதமான படங்களை பாவனையாளர்கள் பதிவேற்றவேண்டும்.
5 காலப்பகுதியில் எடுத்த இந்த படங்களின் மூலம் நமக்கு தெரியாமல் நமது படங்களை சைபர் திருடர்கள் எடுத்து சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன் படுத்த போவதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5differentlookchallenge இந்த டெக் இன் மூலம் சைபர் திருடர்களுக்கு இலகுவாக அனைவரது படத்தையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய முடியும்.
இதுவரை சுமார் 862000 பேர் அவர்களது 5 விதமான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர்.இந்த ஆபத்தான வேலையை நீங்கள் செய்திருந்தால் கவனமாக அதை அகற்ற முயற்சி செய்யுங்கள்.