வானொலி அறிவிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பிரதாப் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies க்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
உங்கள் ஊடக வாழ்க்கையை எங்கு ஆரம்பித்தீர்கள்?
1. 2009 ம் ஆண்டு வசந்தம் வானொலியில் என்னுடைய ஊடக பயணம் ஆரம்பமானது.
ஊடக நிறுவனங்கள் பல வற்றில் தொழில் புரிந்த உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்?
2. பல ஊடக நிறுவனங்கள் என்று சொல்ல முடியாது 2 நிறுவனங்கள் தான் 1ஊடக நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் எங்களுடைய திறமைக்கு களம் என்பது கிடையாது என்ன சொல்லுகிறார்க்ளோ அதை செய்யவேண்டும்.இன்னொரு நிறுவனத்தை பொறுத்த வரைக்கும் இருக்கும் திறமையை முழுமையாக வெளிப்படுத்த களம் கிடைத்தது ஆனால் உயர் தலைமைப்பீடத்திற்கு அதனை அங்கீகரிக்க தெரியாது…(மக்கள் அங்கீகரித்தார்கள் அது ஒன்றே போதுமானது )
நிங்கள் இதுவரை படைத்த நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது?
3. வசந்தம் வானொலியில் நான் ஆரம்ப காலங்களில் தொகுத்து வழங்கிய வசந்த நிலா அதில் உங்களோடு பிரதாப் என் மனதிற்கு நெருக்கமான ஒரு நிகழ்ச்சி காரணம் அன்றைய கால கடடத்திற்கு தேவையான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது பலபேருடைய மனதின் வலிகளை தீர்த்தது அது. என்னை அடையாளப்படுத்தியது வசந்த நிலா….அதே போன்று காலத்திற்கேற்ப நிகழ்ச்சிகளை ஒரு அறிவிப்பாளர் படைக்க வேண்டும் அந்த வகையில் என்னை கலகலப்பான ஒரு அறிவிப்பாளராக குருஜி பிரதாப் எனும் பெயரோடு அடையாளப்படுத்தியது பாட்டு தலைவன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு பிடித்தைவைதான்.
சில ஊடக பிரதானிகளால் சுதந்திரமாக நிகழ்ச்சி படைக்க முடியாதமை உண்மையா?
4. (சின்ன சிரிப்புடன் ) சிலபேர் அவ்வாறு செயற்படுகின்றனர் இதற்கு காரணம் வானொலியில் அவர்கள் எஜமானாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர ஒரு தலைவனாக இருக்க விரும்புவதில்லை.
தற்போது உள்ள வானொலி அறிவிப்பாளர்களில் உங்களுக்கு நிகரான குரல் யாருக்கு உள்ளது?
5. ஒவ்வொருவருடைய குரலும் தனித்துவமானது என்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை என்னிடம்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது எங்கு ஆரம்பமானது?
6. வசந்தம் தொலைக்காடசியில் முதல் செய்தி 21.10.2020 பகல் நேர செய்தியறிக்கையோடு ஆரம்பமாகியிருக்கிறது…செய்தி வாசிப்பில் ஆர்வம் உண்டு 2020 ல் சிறந்த வானொலி செய்தி வாசிப்பாளருக்கான தேசிய விருதினையும் பெற்றிருக்கிறேன்.
தமிழில் சரியான உச்சரிப்பு உடன் கூடிய நிகழ்ச்சிகளை வானொலிகளுளில் தற்போது கேட்க முடிவதில்லை ஏன்?
7. முற்றுமுழுவதுமாக அப்படி சொல்ல முடியாது ஆனால் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்கின்றவர்களில் தான் பிழை அறிவிப்பாளர்களை தெரிவு செய்கின்ற போதே சரியான நல்ல உச்சரிப்பு உள்ளவர்களை தெரிவுசெய்தால் நல்ல தமிழில் நிகழ்ச்சிளை கேட்கலாம் (ட்ரெண்டிங் என்ற பெயரில் தமிழ் என நினைத்து சிலர் பேசுவது வேதனை அளிக்கிறது )
இப்போது பல முன்னாள் வானொலி அறிவிப்பாளர்கள் இணைய வானொலிகளை ஆரம்பிப்பது ஆரோக்கியமான விடயமா?
8. அனுபவமுள்ள திறமையுள்ள முன்னாள் அறிவிப்பாளர்கள் ஆரம்பிப்பது ஆரோக்கியமாகத்தான் இருக்கும் காரணம் இணைய வானொலிகளில் ஒரு தரமான வானொலி சேவையாக இருக்கும் என நம்புகிறேன் ஆனால் இலங்கையை பொறுத்தவரை மக்களிடம் இணைய வானொலிகள் சென்றடைவதற்கு நிறைய காலம் எடுக்கும்.அறிவிப்பாளர் ஆகவேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் தேசிய வானொலிகளில் சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை அந்த வகையில் அவர்களுக்கான ஒரு சந்தர்ப்பமாக கூட இணைய வானொலிகள் அமையலாம் (அனுபவமில்லாதவர்கள் பெட்டி கடை திறப்பது போல் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது)
இன்னும் கொஞ்ச காலத்தில் அலைவரிசை வானொலிகளை யாரும் கேட்கமாட்டார்கள் என்கிறார்கள் இது உண்மையா?
9. இல்லை இதை நான் ஏற்று கொள்ளவில்லை காரணம் வானொலியை ரசிக்கின்றவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள் அலைவரிசை வானொலிகள் இல்லாமல் போகின்ற காலகட்டம் தப்போதைக்கு வராது என நம்புகிறேன் வானொலி என்பது அருகில் ஒரு உறவு இருப்பதை போன்ற உணர்வை தரக்கூடியது அதை ரசிக்கின்றவர்கள் எப்போதும் இருப்பார்கள். நன்றி
நேர்காணல் வழங்கிய வானொலி அறிவிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பிரதாப் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்