இளங்கோவின் அக்னிச் சிறகுகள் ,நம்பிக்கையுடன் பறக்க

இயக்குதல் என்பது ஒரு வகையான சிறப்பு வாய்ந்த கலை .அந்த உன்னத கலையை நன்கு கற்றவர்கள் பலருக்கு மத்தியில் நட்சத்திரம் போல் மின்னும் தாரகை தான் இயக்குனர் இளங்கோ ராம்.

நூற்றுக்கணக்கான விளமபர படங்களை இயக்கிய சர்வதேச விருது வென்ற குறுந்திரைப்பட இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகிறது அக்னிச் சிறகுகள்.

இக் குறுந்திரைப்படம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் இளங்கோ ராம்.இன்னும் ஓரிரு தினங்களில் யுளீட் தலத்தில் வெளியாக போவதாகவும் தெரிவித்துள்ளார்.

A Level முடித்து Next Level போக துடிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கதை இது என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக நம்பிக்கையுடன் பறக்க காத்திருக்கும் அனைவருக்கும் இளங்கோ ராமின் அக்னிச் சிறகுகள் உதவும்.

இளங்கோ ராம் மற்றும் படக்குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!