பாடும் நிலா SPB அவர்கள் இவ் உலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் அவரது குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இன்றும் உலகளாவிய ரீதியில் அவரின் புகழை பலர் தங்கள் குரலால் பாடி நினைவு கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் நமது நாட்டை சேர்ந்த பாடகர்கள் இந்த முயற்சியில் களம் இறங்கியுள்ளார்கள்.
அஞ்சலி பாடல் படப்பிடிப்பு Nias Hamsaபாடலாசிரியர் Asmin Uthumalebbe இசை அமைப்பாளர் Arun Kumarasamy ஆகியோர் இப்பாடலில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்
பாடகர்களான சிவகுமார் ,மஹிந்தகுமார் ,சுருதி பிரபா ,பிரேமானந்த் , நிலுக்ஷி ,சுஜீவா,ஆகியோர் பாடி கொண்டிருக்கும் பாடல் கட்சியின் புகைப்படத்தை பிரேமானத் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
எது எப்படியோ இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். பாடகர்கள் அனைவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.