கல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஸ்(KFM) ஊடகத்தின் மற்றுமொரு படைப்பு “கறுகறுத்தவளே” பாடல் 16.10.2016 உத்தியோகபூர்வ யூடியூப் சனலில் வெளியானது…..கேரளாவின் ஏ.ஜே க்கிரியேஷன் அமைப்பினால் மலையாள மொழியில் வெளியிடப்பட்ட கறுகறுத்தவளே பாடலை.. இலங்கையில் முதன்முறையாக கிராமிய சாயலிலே தமிழாக்கம் செய்து, தென்னிந்திய சினிமாவிற்கு நிகராக மலையகத்தின் சித்தரிப்போடு இப்பாடல் கிழக்கிலங்கையின் கல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஸினால் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது
இப்பாடலினை கிஷா பிலிம் மேக்கர்ஸின் இயக்குனர் வி.டிலோஜனின் இயக்கத்தில், காரைதீவு T.A பார்சல் நிறுவன தலைவர் தரணிதரனின் தயாரிப்பில் இந்தியாவில் இசை பயிலும் சஞ்ஜீவ் தமிழில் பாட, இசையமைப்பாளயளர் சஜய் ஏ.ஆர்.எஸ் இசை வழங்கி,, திரையில் ஹரிஸ், சுவாத்தி, லிதுராஜ் ஆகியோர் பாடலில் நடித்திருக்கின்றனர்.
பாடலின் ஒட்டுமொத்த உருவாக்கத்தில் KFM குடும்பத்தின் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாதது… இப் பாடல் பதிவேற்றம் செய்து ஒரு நாளைக்கு உள்ளாகவே 10,000 பேர் பார்வையிட்டு, சிறந்த கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.இலங்கையிலே தமிழ் மொழியில் முதன்முறையாக தென்னிந்திய சாயலில் மலையக சித்தரிப்பில் புதிய முயற்சியில் உருவாக்கப்பட்ட இப்படைப்பினை, இதுபோன்ற கலைத் திறமைகளை ஆதரிப்பது, ஊக்குவிப்பது கலை ஆர்வலர்கள் எம் அனைவரினதும் இன்றியமையாத கடமையாகும்.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.