கரந்தெனிய கிரீனுக பகுதியில் உள்ள பந்துல சேனாதிரா மகா வித்தியாலயத்தில் கனிஷ்ட பிரிவில் கல்வி பயிலும் கவிஷ சதுரங்க என்ற மாணவன் இன்று புலமை பரிசில் பரீட்சை எழுதினார்.
இது ஒரு முக்கிய செய்தி இல்லை தான்.இருப்பினும் நேற்று இரவு தனது தாய் இயற்கை எய்தியது கூட தெரியாமல் இந்த மாணவன் இன்று பரிட்சைக்கு தோற்றியுயள்ளார்.
கவிஷவின் தாயார் புற்று நோய் காரணமாக காரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இருப்பினும் கவிஷவின் தந்தை இந்த விடயத்தை கவிஷவிடம் இருந்து மறைத்துள்ளார்.காரணம் கவிஷவின் தாயாரின் கனவு கவிஷ இந்த புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைவது தான்.
மாணவன் கவிஷ பரீட்சை முடிந்து வீடு வந்த பின்னரே விடயத்தை அறிந்துகொண்டு தனது தாயாரின் உடலுக்கு அருகில் நின்று அழுத காட்சி அனைவர் மனதையும் கலங்க வைத்தது.
மாணவன் கவிஷ பரீட்சையில் சித்தியடைய இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.