இன்று வளர்ந்து வரும் எத்தனையோ கலைஞ்சர்கள் தங்கள் சொந்த படைப்புக்களை ஒளி / ஒலிபரப்ப வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.
இந் நிலையில் இலங்கையில் கடந்த ஒரு 20 வருடங்களுக்கு அதிகமாக இந்திய தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு மோசமான விதத்தில் நமது கலைஞ்சர்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.
ஐந்து தமிழ் தொலைக்காட்சிகள் UHF இல் , 2 தொலைக்காட்சிகள் கேபல் இணைப்பில் மொத்தமாக இலங்கையில் பேசப்படும் 7 தொலைக்காட்சிகள் உள்ளது.
ஒரு தொலைக்காட்சி சேவைக்கு ஒரு நாளைக்கு 1 மணித்தியாலயம் வைத்தாலும் 7 மணித்தியாலயங்கள் நமது கலைஞ்சர்களுக்காக ஒதுக்க முடியும்.
அந்த வாய்ப்பை தர வசதியில்லாத நமது தொலைக்காட்சிகள் இந்திய கலைஞ்சர்களின் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பணம் தேடுகிறார்கள்…தேடட்டும்…..
இப்படி நமது கலையை ,கலாசாரத்தை மையமாக கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியாதவர்கள் தற்போது மறைமுகமாக ஒரு விபச்சார நிகழ்ச்சியை சந்தைப்படுத்துகிறார்கள்.
கேட்டால் அது தான் இப்ப ட்ரெண்ட் ஆம்.அடுத்தவனின் பிள்ளையை பாலூட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானாக வளரும் என்ற நினைப்பு.
ஒன்றை மாட்டும் நினைவில் வையுங்கள் ஊடக நண்பர்களே அந்த விபச்சார நிகழ்ச்சியை இலங்கையில் மறைமுகமாக நீங்கள் சந்தைப்படுத்துவதன் மூலம் உங்கள் படைப்புக்களை பார்க்கும் மற்றும் கேட்கும் நபர்களின் தொகை குறைகிறது.
காலப்போக்கில் இந் நிலை மாறும் என்று எதிர்பார்க்க முடியாது.நமது நாட்டின் தொலைக்காட்சி கலைஞ்சர்களின் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு நேயர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
எனவே சந்தையில் விளம்பரங்களை பார்த்து பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட ஊடக நிறுவன ஊழியர்களின் ஊதியத்திலும் பிரச்சனை வரும் போது தான் தெரியும் நாம் செய்த தவறு.
இந்திய தொலைக்காட்சிகளை பார்ப்பதை நாம் தடுக்க முடியாது.ஆனால் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உங்கள் வானொலி நிகழ்ச்சிகளில் சந்தைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.