டீ கடை பசங்கவின் புதிய பாடல் தான் எழர.பாடல் இணையத்தில் வெளிவந்து 2 நாட்களில் 5000 பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
பாடல் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமை.அதுவும் புதிய முயற்சியாக கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல இணைய பாடகர் இராஜ் பாடலை வெளியிட்டு வைத்ததை அனைவரும் அறிவீர்கள்.
தற்போது தமிழ் பாடல்கள் சகோதர சிங்கள மொழி பாடகர்களால் களமிறக்கப்படுவது புதிய ட்ரெண்ட் ஆக மாறி வருகிறது.
இருப்பினும் இது ஒரு ஆரோக்கியமான முயற்சி.சிங்கள பாடல் வரிகளும் இந்த பாடலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாடல் மிக பெரிய வெற்றி பெற டீ கடை பசங்க குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.