புதிய படைப்புகள் மூலம் புதிய கலைஞ்சர்கள் உருவாகுவது மகிழ்ச்சியே.
அதுவும் இளம் நடிகர்கள் புதிய அறிமுகங்களாக தோன்றுவதும் ஆரோக்கியமான விடயம்.
சசிகரன் யோவின் இயக்கத்தில் சாத்வீகன் ,சஜூ ,மற்றும் ஜெனிஸ்டன் நடித்திருக்கும் குறுந் திரைப்படம் தான் அத்தியாயம் 01.
சாத்வீகன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் .கேபிடல் தொலைக்காட்சி தொகுப்பாளராக களம் கண்ட சாத்வீகன் சினிமாவிலும் சாதிக்க துடிக்கும் இளைஞன் .
திரை சீசன் 01 தயாரிப்பிலும் YTS ஸ்டூடியோ வின் பங்களிப்பில் இந்த படைப்பு உருவாகியுள்ளது.
இம்மாதம் 12 ஆம் திகதி வெளியாகவுள்ள அத்தியாயம் 01 க்கு பதமயன் சிவா இசையமைத்துள்ளார் .
ஜெயந்தன் விக்கி குரல் டப் செய்துள்ளார்.ஜெனிஸ்டன் உதவி இயக்குனராக பணிபுரிய நிழல் தேடும் கலைஞ்சன் தயாரித்துள்ளார்.
மஸ்ட்டர் பிஸ்சல் ஸ்டூடியோ பிரசார பணிகளை பார்த்துள்ளார்கள்.
சசிகரன் யோ மற்றும் சாத்வீகன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.