தென்னிந்தியாவில் பல நடிகர்கள் தங்களது திறமையை திரைப்படங்களில் வெளிக்காட்டி வந்தாலும் நமது நாட்டில் இருந்து தென்னிந்திய சென்று திரைப்படங்களில் நடிக்கும் நமது நடிகர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
பல நடிகர்கள் தென்னிந்திய சென்று நடித்து வருகிறார்கள்.சமீபத்தில் தென்னிந்திய நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகியுள்ள கன்னி மாடம் திரைபடத்தில் நமது நாட்டின் நாவலபிட்டியவை சேர்ந்த பிரேம்குமார் நடித்துள்ளார்.
பிரேம்குமார் சிறந்த வர்த்தகரும் ஆவார்.நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த சமூக சேவையாளருமான பிரேம்குமார் பாதிரியாராக இந்த படத்தில் நடித்துள்ளார்.
அன்மையில் இவரை UTV யின் மோர்னிங் லைட் நிகழ்ச்சிக்காக கோகுல் நிரஞ்சன் நேர்காணல் கண்டிருந்தார்.
இன்னும் பல சாதனைகளை படைக்க பிரேம்குமார் அவர்களுக்கு
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.