பிரதமருக்கு 5000/= போதுமா?

கொரோனாவால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது.பொருளாதார ரீதியாக அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு 5000 ரூபாவை கடந்த இரண்டு மாத காலமாக இலங்கை அரசு வழங்கியது.

இந் நிலையில் பொலன்னறுவை மெதிரிகிரியாவை சேர்ந்த முன்னாள் கிராம தலைவர் ஒருவர் ஜனாதிபதி கொரோனா நித்தியத்திற்கு 5000 ரூபாவை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பணத்தை பிரதமர் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.அதே நேரத்தில் இது பணம் படைத்தவர்களுக்கு நல்ல ஒரு உதாரணம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!