இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 55.
செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இப்படி இருக்கும் போது அவர் தனது வீட்டில் தவறி விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது .இது உண்மையா?
கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே காலமானதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்லேவை ஆறுமுகன் தொண்டமான் இன்று சந்தித்ததாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.