நடிப்பு என்பது ஒரு விதமான கலை தான்.அந்த உன்னதமான கலையை பலரும் சிறப்பாக சின்னத்திரையிலும் ,வெள்ளித்திரையிலும் இணையத்திலும் வெய்ய்படுத்தி வருகிறார்கள்.
பலருக்கு தங்கள் படைப்புக்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைவதில்லை.ஆனால் சிலருக்கு நல்ல இயக்குனரும் ,தயாரிப்பாளரும் கிடைத்தால் சாதனை படைத்து விடுவார்கள்.
அந்த வகையில் கடந்த சில காலமாக தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் தங்கள் சொந்த படைப்புக்களை தயாரித்து வருகிறது.
தினேஷ் கனகராஜ் நாம் அறிந்த சிறந்த தொலைக்காட்சி தயாரிப்பாளர்.பல நல்ல தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார்.
அவரது படைப்பான ”காதல் வந்திருச்சி” 34 நிமிட திரைக்கதையில் நமது சுதர்ஷன் சூர்யா அசத்தியிருக்கிறார்.அவருக்கான கதாப்பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.
அவர்கள் பணிபுரியும் ஊடக நிறுவன தயாரிப்பு என்பதால் அவர்களது சக நண்பரகளே நடித்துள்ளார்கள்.யாருடைய நடிப்பை பற்றி நாம் இங்கு எழுதவில்லை.ஏனென்றால் வம்புகளை விலை கொடுத்து வாங்கி வைக்க எமக்கு இடமில்லை.
தினேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவுக்கும் சுதர்ஷன் சூர்யாவுக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.