சக்தி டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்தி SUPER STAR இசை மகா யுத்தம் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது,
போட்டியாளர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்திய பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த போட்டிக்கு நடுவர்களாக தென்னிந்தியாவை சேர்ந்த பாடகர் மற்றும் பின்னணி குரல் கலைஞர் SN சுரேந்தர் ,பாடகர் பிரசன்னா ,பாடகி பிரியா பாலசுப்ரமணியம் ,பாடகி ஸ்ரீ லேகா பார்த்தசாரதி ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
இந் நிலையில் 26.04.2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர்களான விஜய லோஷன் மற்றும் மயூரன் ஆகியோரின் பாடல் வரிகளில் தமிழ் உச்சரிப்பு பற்றி நடுவார்களால் பேசப்பட்டது.
குறிப்பாக நடுவரான பாடகர் பிரசன்னா தனது கருத்தை தெரிவிக்கும் போது இந்த சீசனில் பாடிய யாருமே தமிழை முறையாக உச்சரிக்கவில்லை என்ற குற்றசாட்டை சுமத்தினார்.
தமிழுக்காக யார் தியாகம் செய்த நாட்டை சேர்ந்த உங்களால் ஏன் தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல் உள்ளது என்ற கேள்வியை எழுப்பினர்.
நம் நாட்டின் மூத்த பாடகர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ….பொறுத்திருந்து பார்ப்போம்.