சுதாவின் அதிரா நாளை வருகிறாள்

இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுவது என்பது பணம் படைத்தவர்களால் தான் முடியும் என்றும் அதுவும் இலாபத்தை எதிர்பார்க்காமல் சிலரை திருப்தி படுத்தவே திரைப்படத்தை தயாரிக்கும் நிலைமை தற்போது இலங்கையில் உள்ளது.

இருப்பினும் புதிய நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இலங்கையின் ஊடகங்கள் தங்களது நெருங்கிய நண்பர்களின் படைப்புக்களை தூக்கி பிடித்து அதை ஊக்குவித்து அந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து தருகிறது.

சக்தி டிவியின் தயாரிப்பில் சுதர்ஷன் கனகராஜாவின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவான அதிரா
திரைப்படம் நாளை 01.05.2020 சக்தி டிவியில் ஒளிபரப்பாகிறது.

இப்படத்தில் தர்ஷன் கமிலன் ,பிரேம் கணேசன் ,

,பூஜா ,ஜெயசோதி , ராஜ் பிரஷாந்த் , செளகி மற்றும் மிக பெரிய எதிர்பார்ப்புடன் சன் டிவி விஜயசாரதி நடித்துள்ளார்.

லால் மற்றும் பாலா ஒளிப்பதிவை கவனித்துள்ளார்கள்.மனோஜ் படத்தொகுப்பை செய்துள்ளார் .ஹனி இசையை பார்க்க பானுக கலை இயக்குனராக கதையா நகர்த்துகிறார்.

புத்திக திசாநாயக்க கிராபிக்ஸ் வேலையே பார்த்துள்ளார்.பவதாரணன் தேவையான கலவையை செய்துள்ளார்.ரங்கன ஒப்பனையை பார்த்துள்ளார்.சஞ்சீவன் உதவி இயக்குனராக கடமை புரிய 01.05.2020 நாளை மாலை 6.30க்கு சக்தி டிவியில் பார்க்கலாம்.

அடுத்த தடவை திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் போது வெளி கலைஞ்சர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் உங்கள் நிறுவனத்தை இந்த கலை உலகமே தலையில் வைத்து கொண்டாடும்.

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!