லங்காடாக்கிஸ் இணையத்தளமானது கலை துறையை சேர்ந்தவர்கள் ,கலை படைப்பாளிகள் ,ஊடகவியலாளர்கள் என பலரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் அதே நேரம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகளுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு ஊடகம்.சமீபத்திய கொரோனா தொற்றி மூலம் சீர்குலைந்து போயுள்ள எமது சமூகத்திற்கு நமபிக்கை தருவதே எமது நோக்கம்.ஒரு ஊடகவியலாளர் உண்மை செய்தி ஒன்றை தெரிவிக்க அவரின் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான விடயங்களுக்கும் நாம் எதிரானவர்களே.ஊடகவியலாளர் கிருஷ்ணா தொடர்பான செய்திகளுக்கு அவரே தரும் விளக்கம் எமது இணையத்தளம் ஊடாக பதிவேற்றப்படுகிறது.இது எந்த மதத்தையும் ,இனத்தையும் அவமதிக்கவோ அல்லது அவர்களது நம்பிக்கையை சீர்குலைக்கவோ எடுக்கப்படும் முயற்சியல்ல என்பதை அனைவருக்கும் தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.
மார்ச் மாதம் 11 ஆம் திகதிதான் இலங்கையில் கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்ட முதல் நபர் இனங்காணப்பட்டார் இனங்காணப்பட்ட உடனேயே அரசு கூட்டம் கூடுவதை தடை செய்தது சகல கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய கோரியது கூட்டம் கூடாமை மட்டுமே அரசுக்கு தேவைப்பட்டது .
காரணம் கொரோனா விவகாரம் சீனாவில் கோரத்தாண்டவம் ஆட தொடங்கிவிட்டது , அப்போ அரசு மூன்றுவிதமான அணுகுமுறைகளை கையாண்டது ஒன்று வைரஸ் இலங்கைக்குள் வராமல் தடுத்தல் , ரெண்டு வந்தால் உடனேயே தனிமைப்படுத்தல் , மூன்றாவது சமூகத்துல கலந்துவிடாமல் தடுத்தல் இந்த நிலையில் மத ஆராதனை நிகழ்வுகள் நடத்தப்பட கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது , ஆனால் துரதிஷ்டவசமாக வடக்கில் மகா யாகம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது அதனை உடனடியாக நாம் கண்டித்து நிறுத்த கூறினோம் …
அதே சம நேரத்தில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பிலடெல்பியா தேவாலய வளாகத்தை சுவிஸ் இல் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் ஆராதனை நிகழ்வை நடாத்தி இருந்தார் ஆராதனை நடாத்தப்படும் போதே அவர் கடுமையாக சுகயீனம் அடைந்திருந்தார் என்ற தகவல் பின்னாளில் கிடைத்தது. இந்நிலையில் அவர் இங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் தான் நாடு முழுவதும் கொரோனா அச்சம் உச்சத்தை அடைய தொடங்கியது .ஆங்காங்கே தனிமைப்படுத்தல் ஊரடங்கு என அரசு பரபரப்பானது …இந்த நிலையில்தான் குறித்த ஆராதனையை மேற்கொண்ட போதகரும் “கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்” அவர் சுவிஸ் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வேறு ஒரு போதகர் ஜோஸுவா ராஜனேசன் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டார் இதனால் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட சுகாதார பிரிவினரும் , பாதுகாப்பு தரப்பும் பரப்பாகியது குறித்த ஆராதனை நிகழ்வு நடாத்தப்பட்ட அரியாலை செம்மணி வீதியின் பிலடெல்பியா தேவாலய வழாக்கத்தை சூழ்ந்துக்கொண்டு கடும் விசாரணைகள் நடாத்தப்பட்டது.
ஆனாலும் நாம் செய்தியை வெளியிடவில்லை, ஆனால் குறித்த இரண்டாவது பாஸ்ட்டர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியை மையப்படுத்தி மேட்கோள்காட்டி செய்தியை வெளியிட்டோம் எமது குழுவினர் அந்த ஊரடங்கு வேளையிலும் அப்பகுதிக்கு அவசரமாக சென்று நடப்பவற்றை பதிவு செய்தனர் , அப்போதுதான் எனக்கு அழைப்புகள் வந்தன “அது யார் என்றெல்லாம் எனக்கு தெரியாது பிறகு அவர்கள் தொடர்புக்கு வரவும் இல்லை , எனது நிகழ்ச்சிகள் பார்ப்பதாகவும் தொடர்ந்து பார்ப்பதாகவும் இருந்தாலும் அந்த பாஸ்டருக்கு ஏற்பட்டிருப்பது கொரோனா அல்ல கேன்சர் என்று ஒருவரும் , அவருக்கு வந்திருப்பது மாரடைப்பு என்றும் நிறுவ முயன்றனர் இதே போன்ற அழைப்புகள் நண்பர் சுலக்சனுக்கும் வந்தது. ஆனால் ஆதாரம் கேட்டதும் கடைசி வரையில் எதுவும் வரவில்லை இரண்டொரு நாள் கழித்து தாவடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையில் பரிசோதித்துக்கொண்டமை நிச்சயமாக வரவேற்கத்தக்கது (இந்த பத்தி எழுதும் சம நேரத்தில் அவர் குணமடைந்துவிட்டார் என செய்தி கிடைத்துள்ளது )அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் விசாரணைகளில் அவர் கட்டிட ஒப்பந்த விடயமாக கலந்துரையாட சென்றிருந்தத்த்தாகவும் அப்போது அவருக்கு கொரோனா தொற்று பரவியமையும் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான் அடுத்த கூத்து “அந்த ஒப்பந்தக்காரர் தான் குறித்த பாஸ்ட்டர் பால் சற்குணராஜாவுக்கு க்ரோனாவை கொடுத்துவிட்டார் என்று ஒரு புது கதையை கொண்டுவந்தார்கள் “இதற்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பு சுகாதார தரப்பு அனைத்தும் இரவோடு இரவாக சுற்றித்திரிந்து அந்த ஆராதனைக்கு சென்ற அனைவரையும் தனிமை படுத்த தொடங்கினர். திருகோணமலை மன்னார் என்று அந்த ஆராதனைக்கு சென்ற 300 பேர் இவ்வாறு தனிமை படுத்தப்பட்டனர் .
மறுநாள் போலீஸ் பிரதி மா அதிபர் அஜித் ரோஹன் தனியார் தொலைகாட்சி ஒன்றில் “யாழ்ப்பாணத்தில் நடந்ததை தெளிவாக விளக்கினார் தென் கொரியாவில் நடந்தது போன்ற ஒன்றைத்தான் இங்கு அந்த பாஸ்ட்டர் செய்துவிட்டார்” இதனால் ஒரு பாவமும் அறியாத யாழ் மக்கள் இன்று அவதானத்துக்கு உள்ளாகிவிட்டார்கள் என்று பிறகு நாளாக நாளாக இன்று வரை ஏழு பேர் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டார்கள் .
அத்தனை பேரும் அந்த பாஸ்ட்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் (உணவு கொடுத்தவர்கள் , உதவியாளர்கள் )இப்போதும் ஆராதனைக்கு சென்றவர்கள் பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நமது பிரச்சினை ஒன்றே ஒன்றுதான் அந்த தவறை இவ்வளவு தூரம் மூடி மறைக்கு சிலர் முயட்சி செய்வதை எப்படி ஒரு ஊடகக்காரனாக நான் பார்த்துக்கொண்டிருப்பது?,
அது நான் என் தொழிலுக்கு செய்யும் துரோகம் , கொரோனா நமது சக்திக்கு அப்பாட்பட்டது. அதிஷ்டவசமாக இந்த அரசு தமது சக்தியை மீறி போய்விட கூடாது என்பதற்காக கடும் முயட்சி செய்யும் நேரத்தில், கூட்டம் கூடாதீர்கள் என்று பல தளங்களில் நாம் சொல்லியும் கேட்காமல் அந்த பாஸ்ட்டர் ஆராதனை நடத்தியது சட்டப்படி குற்றம் .ஆராதனைக்கு சென்ற மக்களை நாம் ஒரு போதும் குறை கூற மாட்டோம் நடத்தியது தவறு .
வட மாகாண ஆளுநர் உறுதிப்படுத்தி , யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தி பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதிப்படுத்திய பின்னும் இன்னமும் அவரை சில காப்பாற்ற முனைவது வேதனை தருகின்றது இதில்தான் இனி இதில் மறைக்க என்ன இருக்கின்றது என்ற அடிப்படையில் நான் வழக்கமாக நகைச்சுவை உணர்வோடு “கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதல் இம்முறை பாஸ்ட்டர் தாக்குதல் “என ஒரு பதிவிட்டேன் அது எனது நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டவர்கள் பலருக்கு விசனம் ஏற்படுத்தியதை நான் உணர முடிந்தது.
அதன் பின்தான் நான் மன்னிப்பு கோரி அந்த காணொளியையோ வெளியிட்டேன் நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் அப்போ மேட்படி தவறுகளுக்கு யார் மன்னிப்பு கேட்பார்கள் ? என்று காணொளி வெளியிட்டேன் அது உலகம் முழுதும் பரவிவிட்டது .தொண்ணூற்றி எட்டு வீதமானவர்கள் என் கருத்தை ஆதரித்தனர் நான் மன்னிப்பு கேட்டது தவறு என்கிறார்கள், ஆனாலும் யாரையும் புண் படுத்துவது என் இயல்பு அல்ல என்ற அடிப்படியில் மன்னிப்பு கேட்டேன்.
ஆனால் சிலரின் பார்வைக்கு நான் மன்னிப்பு கேட்டது தெரியவில்லை மாறாக அதில் நான் நியாயமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு என் மீது அவதூறை பரப்ப முயல்கிறார்கள் .இந்த விவகாரத்தில் நான் யாருடனும் “விவாதிக்க தயார் யாரும் என்னை அணுகலாம்” , ஆனால் அந்த பாஸ்ட்டரை காப்பாற்ற முயல்வது ஒரு பச்சை துரோகம் .
அன்னை தெரேசா சொல்வது போல நீங்கள் என்மீது துப்புவதை நான் வைத்துக்கொள்கின்றேன் ஆனால் அப்பாவிகளை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று ஒரு குற்றத்தை மறைக்க நினைக்கும் உங்களை நீங்கள் சுய விமர்சனம் செய்துகொள்ளுங்கள்