ஒளிப்பதிவாளர் வீ.வாமதேவன் காலமானார்.
சிங்களத் திரைப்படத் துறையில் சுடர்விட்டுப் பிரகாசித்த தமிழர்களில் வாமதேவன் முக்கியமானவர்.
1957 இல் “வனலிய” (වනලිය) என்ற சிங்களத் திரைப்படத்தில் உதவி கமராமேனாக தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த வாமதேவன், ஒளிப்பதிவாளராக, ஒளிப்பதிவு இயக்குனராக, வெளிநாட்டு படங்களில் உதவி ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு இயக்குனராக பணிபுரிந்து, முன்னணி ஒளிப்பதிவாளராக பெயரெடுத்தவர்.
1996 வரை சிங்களத் திரையுலகில் பிரகாசித்தவர். மொத்தம் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
1952இல் வெளியான எலிபண்ட் போய், 1959இல் வெளியான ‘த்ரீ யெலோ தெட்ஸ்’
ஆகிய படங்களில் பணியாற்றிய இவருக்கு, காமினி பொன்சேகாவின் ‘ரம்பேஜ்’, ‘கொடிவல்கய’ (1982), நொமியன மினிஸ்ஸு (1995) ஆகிய படங்கள் அவருக்கு புகழ் சேர்த்தவற்றில் சில.
நாங்கள் நடித்து இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான மாத்தளை கார்த்திகேசுவின் “காலங்கள்” தொலைக்காட்சித் தொடர்நாடகத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் காமினி பொன்சேக்காவுடன் நடித்தார் என்பது மகிழ்ச்சிக்குரியதொரு தகவல்
ஒளிப்பதிவாளர் வாமதேவன் சிங்களத் திரையுலகில் ஒரு சகாப்தம்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக..!
அன்னாரது நாமம் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத நாமம்..!