மறைபுதிர் குறும்படம் வெருகல் மண்ணின் முதலாவது கலை படைப்பு.இந்த படத்தின் பெருமைகூறியவர்களை இளம் இயக்குனர் ஜனா தனது முகப்புத்தகத்தில் வாழ்த்தியுள்ளார்.
ஸ்ரீ சண்பகா… மறைபுதிர் குறும்பட விழாவிற்கு அரங்கத்தை தந்து பாடசாலை வளங்களையும் தந்துதவி செவ்வனே செய்து ஆசிரியர்களையும் மேற்பார்வைக்குவிட்டு விழாவை விசேட அதிதியாக சிறப்பித்த ஸ்ரீ சண்பகா பாடசாலை அதிபர் அவர்களுக்கும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் மறைபுதிர் படக்குழு சார்பாக நன்றிகளை கூறிகொள்கிறோம் எமக்கு பிரதிபலன் பாராது உதவிய அனைவருக்கும் நன்றிகள்
,……………
ETM இந்துகல்லூரி
எமக்கு பல வழிகளிலும் பாடசாலை வளங்களை பயன்படுத்தி நடிகைகளை நடிக்க எடுத்து தந்துதவி எமது படத்தை வெற்றி பெற செய்த
ETM இந்துகல்லூரி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பாடசாலை சமூகம் அனைவருக்கும் நன்றிகள்
…………….
பூநகர் திருவள்ளுவர்
எமக்கு பல வழிகளிலும் பாடசாலை வளங்களை பயன்படுத்தி நடிகர்களையும் எடுத்து எமது படத்தை வெற்றி பெற செய்த
பூநகர் திருவள்ளுவர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பாடசாலை சமூகம் அனைவருக்கும் நன்றிகள்
மற்றும்
கதிரைகளை கொடுத்துதவிய
ஸ்ரீ சண்பகா பாடசாலை சமூகம்
ஜீவரூபன் மாமா
கறுக்காமுனை RDS/மரணசங்கம்
பிரதேசசபை தவிசாளர்/பிரதேசசபை ஊழியர்கள் சமூகம்
அனைவருக்கும் நன்றிகள்
நான் இன்னும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன்
CV லக்ஸ் தனது பதிவில் இவ்வாறு கூறியுள்ளார் Jana Mohendran இன் “மறைபுதிர் “குறும்பட வெளியீட்டிற்கு சென்றிருந்தேன். சரியான களம் கிடைத்தால் இவர் எமது சினிமாத்துறையின் வரலாறு ஆகுவார்.
ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு நவீன உலகின் இலத்திரனியல் தாக்கத்தை மையப்படுத்தி இப்படி ஒரு நேர்த்தியான படைப்பை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது ..
திறமைகள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு சூழ்நிலைகள் காரணங்களாகின்றன.. இந்த குறும்படத்திற்காய் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களுக்கு அன்றைய தினம் பலத்த ஆதரவை கொடுத்த ஈச்சிலம்பற்று ஊர் மக்களுக்கு நன்றிகள்
Bharanee cine camp தனது பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்வெருகல் பிரதேசத்தின் முதல் குறும் திரைப்படம் மறைபுதிர் இயக்குனர் ஜனா இன் இயக்கத்தில் வெளியீடு செய்யபட்டது மட்டக்களப்பு தாண்டி எமது அயல் மாவட்டத்திலும் கலையை ஊக்குவிக்கும் முகமாக Bharanee cine camp நாங்களும் குறும் திரையின் பின்னணி குரல் வழங்கல் பணியில் கை கோர்த்து இருந்தோம் .
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இயக்குனர் ஜனா இன்னும் பல வெற்றிகளை தொடர இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.