காட்சி திரையிடல் 7 ஆம் திகதி
இலங்கையில்
ஹென்ரிக் இப்சனின் ஒரு அருமையான படைப்பு தான் A DOLLS HOME .
இப்படிப்பட்ட அருமையான கதையா தமிழில் மொழியாக்கம் செய்து இயக்குவது என்பது சாதாரண விடயமல்ல.
ஒரு தேர்ச்சி பெற்ற அதுவும் ஒளி ,ஒலிபரப்பு துறையில் முதிர்ச்சி அடைந்த ஒருவர் தான் இலங்கையின் சிரேஷ்ட ஒளிபரப்பாளரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான திரு விக்னேஸ்வரன் அவர்கள்.
A DOLLS HOME கதையை தமிழில் இயக்கி இருக்கிறார் விக்னேஸ்வரன்,
இதன் வீடியோ காட்சி திரையிடல் இம்மாதம் 7 ஆம் திகதி கொழும்பு 7 ,இல 303 அமைந்துள்ள தரங்கணி சினிமா மண்டபத்தில் திறையிடபடவுள்ளது.
மார்ச் 7ம் திகதியை இதற்கென ஒதுக்கி வைத்திருங்கள். நாடகத்தில் ஆர்வமுள்ள உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைக்கலாம்.
அப்படி யாரும் வருவதாயின் February மாதம் 7ம் திகதிக்குமுன் அவர்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் தருவீர்களாயின் நாம் அழைக்கப் படுபவர்களின் சரியான எண்ணிக்கையைக் கணக்கிடக் கூடியதாக இருக்கும்.
துறைசார்ந்தவர்களுக்கு முன்உரிமை அழித்து எஞ்சி உள்ள ஆசனங்களுக்கு மற்றவர்களை அழைப்பதே எம் நோக்கம்
இது அழைக்கப்படுபவர்களுக்கான காட்சி. கட்டணம் கிடையாது.
மூத்த ஒலி, ஒளிபரப்பாளர்
விக்னேஸ்வரன் அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.