இந்திய படைப்புக்களை தூக்கி பிடித்து பேசுவோருக்கு வாய் அடைக்கும் வகையில் நமது நாட்டின் படைப்புகள் தற்போது வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
நடிகர் சிந்தரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள பாலை காணொளி பாடல் வேறு ஒரு கட்டத்த்தை ஈழத்து படைப்பாளிகள் அடைந்ததை பறைசாற்றுகிறது.
பாடலை பதிவு செய்த இடம் ,பாவிக்கப்பட்ட கலை அம்சங்கள் ,ஆடைகள் என எல்லாமே வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது.
இனி வரும் படைப்புகளுக்கு பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.
காரணம் பாலையை போன்ற பிரமாண்ட கலை அம்சங்கள் கொண்ட படைப்புகளுக்கு நிகராக தயாரிக்க வேண்டி இருக்கும்.
யாழ். இளைஞர்களின் பாலை பாடல் தொகுப்பு வெளியாகி இணையங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பாலை ஆல்பம் தொகுப்பில் வெளியான இப்பாடல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று இருக்கும் இப்பாடல் 4Kஇல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர்களின் அபார முயற்சிகளுக்கு அங்கிகாரத்தினை இளைஞர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலை குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.