இந்த நாட்டில் தமிழில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு நடிகர்களை தேடுவது ஒரு கடினமான காரியம். அங்காங்கே சிதறி சிதறி இயங்கும் அனைவரையும் ஒரு திரைப்படத்திற்கென ஒன்று திரட்டுவது பெரும் வேலை.
அதை இலகுபடுத்தவும் சரியான பாத்திர தெரிவுகளை இலகுவாக செய்யவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என நமௌகிறேன். இங்கு எந்த வரைமுறையும் இல்லை. எந்த வகை சினிமாவாக இருக்கட்டும். எந்த அரசியலும் பேசட்டும்.
சினிமா என்பது மட்டுமே ஒரே அடையாளம் . நடிப்பார்வம் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயது, பால், பிரதேச, மத, அனுபவ எல்லை கிடையாது. மொழி எல்லை கூட கிடையாது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது.